ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்க கூட்டம்  

சிவகங்கை: சிவகங்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகி முனீஸ்வரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பூமிராஜ் வேலை அறிக்கை, மாவட்ட பொருளாளர் பால்கன் நிதிநிலை அறிக்கை வாசித்தனர்.

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, விடுதி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோபால், நெடுஞ்சாலை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மாரி பங்கேற்றனர்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றினர்.

மாவட்ட துணை தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.

Advertisement