ரோட்டில் பாயும் கழிவு நீர் சுகாதார சீர்கேடு அபாயம்
பொங்கலுார்: கொடுவாயில் கழிவு நீர் பிரச்னை தீராத தலைவலியாக உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, கொடுவாய் சந்தை கடை ரோட்டில், 2022- -23ம் நிதி ஆண்டில் செங்குத்து உறிஞ்சு குழி அமைக்கப்பட்டது.
கோட்டைமேடு பகுதியில் சேகரமாகும் கழிவு நீர் முழுவதும் அங்கு சென்று நிலத்திற்குள் இறங்கும் வகையில் கட்டப்பட்டது.
இதற்காக மக்கள் வரிப்பணம், 1.41 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இதனால் கழிவு நீர் பிரச்னை தீர்ந்து விடும் என பொதுமக்கள் சந்தோஷப்பட்டனர்.
ஆனால், தொடர் பராமரிப்பு இல்லாததால் கால்வாய் மற்றும் உறிஞ்சு குழியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் சேர்ந்து, உறிஞ்சு குழி பயனற்று போனது. இதனால், கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது.
வாகனங்கள் வேகமாகச் சென்று ரோட்டைக் கடக்கும் பொழுது, ரோட்டோரத்தில் செல்பவர்கள் மீதும், குடியிருப்பு வாசிகள் மீதும் கழிவு நீர் வாரி இறைக்கப்படுகிறது.
துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும்
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!