பல்லடம் அடுக்குமாடி குடியிருப்பு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

பல்லடம்: பல்லடத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க, 20ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது.
பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி, உயர் தொழில்நுட்ப பூங்கா அருகே, எட்டு தளங்களுடன், 432 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்தக் வீடுகளை பெற விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள், 3.08 லட்சம் ரூபாய் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.
குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை பயனாளியின் போட்டோ, ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இதற்கான பயனாளிகள் தேர்வுக்கு பொதுமக்கள் ஏற்கனவே விண்ணப்பித்து வந்த நிலையில், கடந்த, 2023ம் ஆண்டே காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
இதனையடுத்து, வரும் மே 20ம் தேதி வரை மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க விரும்பும் பொதுமக்கள், வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, 96267 27628 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு