மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: பஞ்சாப் அரசு உத்தரவு

சண்டிகர்: இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல் நடந்து வரும் நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, பஞ்சாப் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் அரசு கூறியுள்ளதாவது: மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டின் ஜன்னலை விட்டு விலகி இருக்க வேண்டும். விளக்குகளை எரிய வைக்க வேண்டாம். சைரன் அடித்தவுடன் செய்திகளை . மக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஆயுதப்படைகள் பணியில் உள்ளன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுடன் 532 கி.மீ., எல்லையை பஞ்சாப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஆறு எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து போலீசாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
Advertisement
Advertisement