பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு

ஸ்ரீநகர்: "பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன" என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள் , ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். இந்நிலையில் ஜம்முவில் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலால் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர், இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜம்முவில் பொதுமக்களை குறிவைத்து ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், நமது இந்திய பாதுகாப்புப் படைகள் விரைவாகவும், திறமையாகவும் செயல்பட்டு சதி முயற்சியை முறியடித்தனர்.






