அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

புதுடில்லி: '' அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என அனைத்து மாநிலங்களின் தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குறிவைத்துஇந்தியா தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, நேற்று முன்தினமும், நேற்றும் இந்திய நகரங்களை நோக்கி டுரோன்கள், ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. உடனடியாக இந்திய ராணுவம் அவற்றை தாக்கி அழித்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களை பாதுகாக்கும வகையில் செய்ய வேண்டிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மருந்து, உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைப்பதுடன், கூடாரம், வாகனங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
