சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு

10

புதுடில்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துவிட்டது.

கடந்த 1960 ல் உலக வங்கியின் முன்னிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவால் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது எனவும் கூறியிருந்தது.


இந்நிலையில், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அல்லது அது தொடர்பாக திட்டம் ஏற்படுத்துவதைத் தவிர உலக வங்கிக்கு எந்த பங்கும் இல்லை. உலக வங்கி எப்படி இந்த பிரச்னையில் தலையிட்டு சரி செய்யும் என்பது குறித்து பல ஊடகங்களில் பல யூகங்கள் வருகின்றன. ஆனால், அவை அனைத்தும் கற்பனையே. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உலக வங்கி தலைவர் அஜய் பங்கா உ.பி., தலைநகர் லக்னோ வந்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

Advertisement