மார்க்கெட் வியாபாரிகள் அதிருப்தி
திருப்பூர்: ஆலோசனை கூட்ட கருத்துகளை பதிவு செய்யவில்லை என்று, வியாபாரிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை சங்க அலுவலகத்தில், சங்க தலைவர் தங்கமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில், தினசரி மார்க்கெட் வளாகம் ஏல நடைமுறை குறித்து மாநகராட்சியில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின், சங்கத்தின் சார்பில் மேயர் மற்றும் கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த வாரம், மாநகராட்சி சார்பில் நடந்த தினசரி மார்க்கெட் ஏலம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் எங்கள் சங்கம் சார்பில் பங்கேற்றோம். இதில் கடைகள் வாடகை நிர்ணயம் செய்து ஏலம் நடத்த வேண்டும். முன்புறம் உள்ள 17 கடைகளுக்கும் உட்புறம் வழி அமைக்க வேண்டும். எங்களுக்கு தரை தளத்தில் கடை ஒதுக்க வேண்டும்; வளாகத்தின் முன்புறம் கடைகள் அமைக்க கூடாது என்பது உள்ளிட்டகருத்துகளை பதிவு செய்தோம். ஆனால், இந்த கருத்துகளை கூட்ட 'மினிட்' நோட்டில் அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. இரண்டு ஆண்டு என்று கூறி நான்கரை ஆண்டுக்கு மேலாகியும் பணி முடியாமல் உள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.
மேலும்
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை