முருங்கை விலை 'சதம்'

பொங்கலுார்: கடந்த பங்குனி மாதத்தில் முருங்கை சீசன் துவங்கியது. அபரிமிதமான விளைச்சல் காரணமாக, முருங்கை மொத்த விற்பனை விலை குறைந்தபட்சம் கிலோ இரண்டு ரூபாய்க்கு விலை போனது. திருப்பூர் உழவர் சந்தையில் கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சித்திரை மாத முதல் வாரத்தில் இருந்து முருங்கை வரத்து படிப்படியாக குறையத் துவங்கியது. தற்போது வரத்து மிகவும் குறைந்துள்ளது.

சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் முருங்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவு விவசாயிகளே முருங்கைக் காய்களை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். திருப்பூர் உழவர் சந்தையில் நேற்று கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement