கனவு இல்லம் - வீடு பழுது பார்த்தல் ரூ.4.57 கோடி மதிப்பில் பணி ஆணை
திருப்பூர்: கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, பெருமாநல்லுார் லட்சுமி மஹாலில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமைவகித்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட 157 பயனாளிகளுக்கு, 4.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட பணிகளுக்கான ஆணை வழங்கினார்.
அதன்பின், அமைச்சர் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், 1,411 பயனாளிகளுக்கு, 49.38 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில், 2,093 பயனாளிகளுக்கு, 15.30 கோடி ரூபாய் என, மொத்தம் 3,504 பயனாளிகளுக்கு, 64.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கடந்த ஏப்., மாதம், 1,211 பயனாளிகளுக்கு, 36.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 157 பயனாளிகளுக்கு, 4.57 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தாராபுரம், குடிமங்கலம், காங்கயம், குண்டடம், மூலனுார், பல்லடம், பொங்கலுார், உடுமலை, வெள்ளகோவிலில் பயனாளிகளுக்கு, கனவு இல்லம், வீடுகள் பழுது பார்த்தலுக்கான ஆணை வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் தங்கள் வீட்டை பராமரிப்பு செய்து, நீண் நாட்களுக்கு பயன்படுத்தவேண்டும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) சரவணன், பி.டி.ஓ.,க்கள் ரமேஷ், விஜயகுமார், விமலாவதி உள்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து