எல்லையோர மக்களின் பாதுகாப்பு: குஜராத் முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை

1

புதுடில்லி: எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், தயார் நிலைகள் குறித்து குஜராத் முதல்வரிடம் பிரதமர் மோடி பேசினார்.


பாகிஸ்தானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.


தற்போது எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மோடி கேட்டறிந்தார். இது குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி என்னுடன் தொலைபேசியில் உரையாடி, எல்லையில் நிலவும் பதற்றம், தற்போதைய சூழ்நிலை, மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

பனஸ்கந்தா, படான், கட்ச் மற்றும் ஜாம்நகர் ஆகிய எல்லை மாவட்டங்களில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக மாநில அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க அறிவுரை வழங்கினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement