கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஊத்துக்குளி: ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 29. வேலை இல்லாத நாட்களில் சேடர்பாளையத்தில் பொது கிணற்றில் குளிப்பது வழக்கம். கடந்த, 6ம் தேதி காலை, வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர்,

வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு சுற்றியவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் மாலை பொது கிணற்றில் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்து, ஊத்துக்குளி தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு பார்த்தனர். அப்போது, பிரபாகரன் இறந்து கிடப்பது தெரிந்தது. மதுபோதையில் கிணற்றில் குளிக்க சென்று, மூழ்கி இறந்தது தெரிந்தது. இது குறித்து, ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement