கொப்பரை ஏலம்; விவசாயிகள் உற்சாகம்

ஆனைமலை; ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 383 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 169.55 ரூபாய் முதல், 175.99 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 347 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 103.40 முதல், 155.10 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 730 கொப்பரை மூட்டைகளை, 128 விவசாயிகள் கொண்டு வந்தனர்; 10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 50.92 லட்சம் ரூபாய் மதிப்பிலான, மொத்தம், 328.5 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
* நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், கடந்த வாரம் நடந்த ஏலத்தில், 50 கிலோ எடை கொண்ட 81 மூட்டைகள் கொப்பரை, 6 லட்சத்து, 88 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு விற்பனையானது.
முதல் தர கொப்பரை கிலோவுக்கு, 170 முதல் 173 ரூபாய் வரை விலை கிடைத்தது. இதில் நான்கு விவசாயிகள் மற்றும் மூன்று வியாபாரிகள் பயனடைந்தனர். இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும்
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு