வேகத்தடைகளுக்கு வெள்ளை கோடு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

உடுமலை; பல்லடம் மாநில நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடைகளில், வெள்ளைக்கோடுகள் அமைக்கும் பணி, நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் நால்ரோட்டில் இருந்து வாவிபாளையம் வரை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.
இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க, வேகத்தடை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், வேகத்தடைகளில் இருந்த வெள்ளை நிற கோடுகள் மங்கி, வாகன ஓட்டுநர்கள் திணறி வந்தனர்.
தற்போது அனைத்து வேகத்தடைகளிலும், வெள்ளை நிற கோடுகளும், இதர எச்சரிக்கை குறியீடுகளும் அமைக்கும் பணிகள் மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
Advertisement
Advertisement