'கூகுள் மேப்' பார்த்து சென்ற லாரி விபத்து

கிணத்துக்கடவு; கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு பிளாஸ்டிக் கழிவு ஏற்றிக்கொண்டு (ஸ்கிராப்) சென்ற, கர்நாடகா பதிவு எண் கொண்ட கனரக லாரி, பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலை கோதவாடி பிரிவு பகுதியில் உள்ள வளைவில், நேற்று அதிகாலை நேரத்தில் ரோட்டோரம் கவிழ்ந்தது.

லாரியை கேரளாவை சேர்ந்த டிரைவர் வினு, 32, ஓட்டினார். அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். 'கூகுள் மேப்' பார்த்து திருப்பூருக்கு செல்லும் போது, தவறான பாதையில் சென்றதால் விபத்து நடந்ததாக டிரைவர் போலீசில் தெரிவித்தார்.

Advertisement