அதிதி ஹெக்டே 'வெண்கலம்': 'கேலோ இந்தியா' நீச்சல் போட்டியில்

பாட்னா: 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு நீச்சல் போட்டியில் (1500 மீ., 'பிரீஸ்டைல்') இந்திய வீராங்கனை அதிதி ஹெக்டே வெண்கலம் வென்றார்.
பீஹாரில், 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் நடக்கிறது. துப்பாக்கி சுடுதல், சைக்கிள் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.
பாட்னாவில் நடந்த பெண்கள் நீச்சல் போட்டி 'பிரீஸ்டைல்' 1500 மீ., பிரிவில் மஹாராஷ்டிராவின் அதிதி சதிஷ் ஹெக்டே வெண்கலம் கைப்பற்றினார். இது, 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு அரங்கில் அதிதி வென்ற 7வது பதக்கம். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் 5 தங்கம் வென்ற இவர், இம்முறை 50 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
ஒடிசா 'தங்கம்': பெண்களுக்கான 'கோ கோ' பைனலில் ஒடிசா அணி, மஹாராஷ்டிராவை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆண்களுக்கான பைனலில் மஹாராஷ்டிரா அணி, ஒடிசா அணியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.