செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'

புக்காரெஸ்ட்: கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் தற்போது நடக்கிறது. இதன் இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்காவின் பேபியானோ காருணா உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா, பேபியானோ காருணா மோதினர். 50 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை எதிர்கொண்டார். 56 வது நகர்த்தலில் குகேஷ், 'டிரா' செய்தார்.
இரண்டு சுற்று முடிவில் பிரான்சின் அலிரேசா (1.5), காருணா (1.0), அமெரிக்காவின் வெஸ்லே (1.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். தலா 1.0 புள்ளியுடன் பிரக்ஞானந்தா 8, குகேஷ் 9வது இடத்தில் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement