வன்முறை தடுப்பு முறை: சேலம் போலீசார் ஒத்திகை
சேலம், வன்முறை காலத்தில் கூட்டத்தை கலைக்கும், கலவர தடுப்பு முறைகள் குறித்த ஒத்திகை பயிற்சி, சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமை வகித்தார்.
அதில் வன்முறை ஏற்படும்போது, ஒவ்வொரு நிலைகளாக போலீசார் எதிர்கொள்ளும் முறைகள் குறித்து, தத்ரூபமாக செய்து காட்டினர். ஒருபுறம் போலீசார், மறுபுறம் கலவரக்காரர்களை போன்று மாறுவேடத்தில் போலீசார் இருந்தனர். கலவரக்
காரர்கள், டயர், அங்கிருந்த பொருட்களை தீ வைத்து, போலீசார் மீது கற்களை வீசினர். கம்பு, மரக்கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயன்றனர். மேலும், 'போலீசாருக்கு எதிராக நீதி வேண்டும்; போலீசார் அராஜகம் ஒழிக' என கோஷம் எழுப்பினர்.
முதலில் சட்டவிரோதமாக கூடியதை கலைந்து செல்லும்படி, ஒலிபெருக்கி மூலம் போலீசார், கலவரக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து தடுப்புகளை ஏற்படுத்தி கலவரக்காரக்களை தடுத்து நிறுத்தினர். மீறி கலவரக்காரர்கள் முன்னோக்கி வந்ததால், அவர்களை நோக்கி தடியடி நடத்தினர். இருப்பினும் கலவரக்காரர்கள் கலைந்து செல்லாததால், அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டு வீசி, வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பின் கலவரக்காரர்களை சுற்றி வளைத்து கைது செய்து, வாகனத்தில் ஏற்றி, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். தடியடி, துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த கலவரக்காரர்களை, உடனே மீட்டு முதலுதவி அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்றும் செய்து காட்டினர். பயிற்சியின்போது போலீசார் தலைக்கு ஹெல்மெட், தடுப்பு கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபரகணங்களுடன், லத்தியால் கலவரக்காரர்களை தாக்கும் முறை, கண்ணீர் புகை குண்டுகள் வீசுவது, துப்பாக்கிகளை சரியான முறையில் கையாளுவது குறித்து அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!
-
கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி
-
காஷ்மீர் பிரச்னையில் யாரின் மத்தியஸ்தமும் அவசியமில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி