ஜெய்ஸ்வால் முடிவில் மாற்றம்

மும்பை: இந்திய அணி துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 23. உ.பி.,யை சேர்ந்த இவர், 2018 முதல் உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடினார். கடந்த மாதம் கோவா அணியில் இணைய முடிவு செய்தார். இதற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) அனுமதி வழங்கியது.
ரஞ்சி கோப்பை தொடரின் போது, மும்பை அணி கேப்டன் ரகானேயுடன் ஏற்பட்ட மோதல் தான், ஜெய்ஸ்வால் முடிவுக்கு காரணம் எனத் கூறப்பட்டது.
தற்போது, மீண்டும் மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்.சி.ஏ.,க்கு அவர் எழுதிய கடிதத்தில்,' குடும்ப காரணங்களுக்காக கோவாவுக்கு செல்ல இருந்த முடிவை தற்போது மாற்றியுள்ளேன். மீண்டும் மும்பை அணிக்காக விளையாட விரும்புகிறேன். இதற்கு அனுமதிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Advertisement