பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

2

புதுடில்லி: பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் 3 விமானப்படை தளங்கள் மீது இன்று(மே 10) அதிகாலை இந்திய ராணுவம் தாககுதல் நடத்தியது.

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பாக்., தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவம் பாக்., ட்ரோன்களை முறியடித்து வருகிறது.

ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் உள்ள நுர்கான், முரித், ரபிக் விமான தளங்களை இந்திய ராணுவம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது.


Advertisement