மூதாட்டியை பலாத்காரம் செய்து செயின் பறித்த வாலிபர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்து 2 பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலிமாவட்டம் காவல்கிணறு அருகே பெருங்காளியாபுரத்தை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. தனக்கு சொந்தமான ஆடுகளை தினமும் ஊருக்கு அருகில் காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டுசென்று மாலை வீடு திரும்புவார்.

நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபர், மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினையும் பறித்துச் சென்றார். பணகுடி போலீசார் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவல்கிணற்றை சேர்ந்த லட்சுமணன் 25 ,என்பவரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கைது செய்தனர். டூவீலரில் சென்ற அவரை போலீசார் துரத்தி சென்ற போது கீழே விழுந்ததில் கை முறிந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement