மாணவ, மாணவியருக்கு நீச்சல் பயிற்சி வகுப்பு
தர்மபுரி,தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், நான்காம் கட்ட நீச்சல் பயிற்சி துவங்க உள்ளது.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தர்மபுரி பிரிவு சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நீச்சல் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நான்காம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள், வரும், 13 முதல், 25 வரை, தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடக்கவுள்ளது. காலை, 7:00 முதல், 8:00 மணி வரை, காலை, 8:00 முதல், 9:00 மணி வரை மற்றும் மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும், காலை, 9:00 முதல், 10:00 மணி வரை, மாணவியர் மற்றும் பெண்களுக்கும் பயிற்சி வகுப்பு நடக்கும்.
நீச்சல் பயிற்சி கட்டணமாக, 1,770 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை நீச்சல்குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி நீச்சல் பழகலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்
-
ராணுவ வீரர்களை எங்களின் கண் இமைகளாக கருதுகிறோம்: சொல்கிறார் சீனிவாசன்
-
ராமேஸ்வரம் கோவிலில் ஓ.பி.எஸ்., ருத்ர பூஜை
-
எல்லை கருப்பராயசாமி கோவிலில் தமிழக கவர்னர் ரவி வழிபாடு
-
ஆகமம் இருக்க அணுகுண்டு வேண்டாம்: காமாட்சிபுரி ஆதினம் கருத்து
-
அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கல்
-
சித்ரா பவுர்ணமிக்கு வள்ளி கும்மியாட்டம்