வெள்ளப்போக்கி அமைக்க எதிர்ப்பு; 13ல் போராட்டம்

ஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம், 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. வாய்க்கால் நவீன சீரமைப்பு திட்டத்துக்கு விவசாயிகளின் எதிர்ப்பு, ஆதரவால், குறிப்பிட்ட இடங்களில் பணி நடந்து நிறுத்தப்பட்டது.

தற்போது திருப்பூர் மாவட்ட எல்லை, மரவபாளையம் (95/2 மைல்) பகுதியில், அவசர கால வெள்ளப்போக்கி அமைக்க நீர் வளத்துறை அறிவித்தது. இதை எதிர்த்து வரும், 13ல் முத்துார் நீர் வளத்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்த, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. ஈரோடு நீர் வளத்துறை அலுவலகத்தில், நேற்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த அதிகாரிகள், கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டனர். இதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement