மெதுார் - அரசூர் சாலை பணி அரைகுறை சாலையோரம் மண் நிரப்பாததால் அச்சம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் இருந்து, அரசூர் செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால், கிராமவாசிகள் சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர்.
ஒன்றிய சாலையில் இருந்து, நெடுஞ்சாலைத் துறையின் கிராம சாலைகள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இச்சாலையை நெடுஞ்சாலைத் துறை வாயிலாக நபார்டு திட்டத்தின் கீழ், 4.17 கோடி ரூபாயில், 3.4 கி.மீ தொலைவிற்கு தரம் உயர்த்தி சீரமைக்கும் பணிகள், கடந்தாண்டு டிசம்பரில் துவக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் முடிந்துள்ளன.
அதேசமயம், சாலையின் இருபுறமும் மண்ணைபோட்டு பலப்படுத்தும் பணிகள் அரைகுறையாக விடப்பட்டு உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஒரு சில இடங்களில் சாலை மட்டத்தைவிட, ஓரங்களில் உள்ள பகுதிகள் ஒரு அடி தாழ்வாக இருக்கிறது. எதிரெதிரே வாகனங்கள் பயணிக்கும்போது, தாழ்வான பகுதிகளில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. இதனால், சாலையோரங்களும் சேதமடைந்து வருகின்றன.
இருசக்கர வாகனங்களில் செல்வோர், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக இடதுபுறம் ஒதுங்கும்போது, தாழ்வான பகுதியில் தடுமாறி விழுந்து சிறு சிறு விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே, சாலையோரங்களில் செம்மண் கொட்டி பலப்படுத்தி, அசம்பாவிதங்களை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
-
துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'
-
போராட்டம் தள்ளிவைப்பு ஜவாஹிருல்லா அறிவிப்பு
-
கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு காயம்
-
கனிம கொள்ளையை எதிர்த்த 13 பேர் 'விபத்தில்' உயிரிழப்பு மா.கம்யூனிஸ்ட் ஆதங்கம்
-
'எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு சாதனை': திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்