பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், இன்று மதியம் குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ராசி விட்டு மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவது வழக்கம்.
இன்று மதியம், 1:19 மணிக்கு குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அதையொட்டி, நேற்று முன்தினம் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நவகிரக மூர்த்திகளுக்கும், குரு பகவானுக்கும் விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பம், லட்சார்ச்சனை தொடங்கியது.
நேற்று, இரண்டாவது நாளாக, நவகிரக மூர்த்திகளுக்கும், குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. குரு பெயர்ச்சியையொட்டி, இன்று மதியம், மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

Advertisement