தி.மு.க., அரசின் சாதனை விளக்க கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மல்லிகைப்பட்டு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.முருகன், முருகன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், துணை சேர்மன் வீரராகவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் முகமது இப்ராஹிம், அப்துல் வஹாப் சிறப்புரையாற்றினர்.
இதில், மாவட்ட பொறுப் பாளர் கவுதமசிகாமணி பேசுகையில், இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
நான்கு ஆண்டுகளில் 18 துறைகளில் தமிழகம், முதலிடத்தில் உள்ளது என் றார். அப்போது, நிர்வாகிகள் செல்வம், சிவக்குமார், ஏழுமலை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன், ஏழுமலை, சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அவைத்தலைவர் பழனி நன்றி கூறினார்.