ஆதிசக்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழா

விருத்தாசலம்: தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில் தேர்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் சித்திரை பவுர்ணமி தேர் திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், இரவு 8:00 மணிக்கு வீதியுலா நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
காலை 8:30 மணிக்கு நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
இன்று (12ம் தேதி) மதியம் 1:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், நாளை 13ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு தெப்பல் உற்சவம், 14ம் தேதி சண்டிகேஸ்வரர் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.