வீரட்டேஸ்வரர் கோவிலில் கொடி மரம் நடும் விழா

நெய்வேலி: நெய்வேலி அடுத்த வேகாக்கொல்லை கிராமத்தில் பழமைவாய்ந்த களப்பாள வீரட்டேஸ்வரர் கோவிலில் கொடிமரம் நடும் விழா நடந்தது.
நெய்வேலி அடுத்த வேகாக்கொல்லை கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள களப்பாள வீரட்டேஸ்வரர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோவில் கும்பாபிேஷகம் ஜூன் 8ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு 5ம் நுாற்றாண்டுகளுக்கு பிறகு 21 அடி உயர கொடி மரத்தை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கி நிறுவினர்.
நிகழ்ச்சியில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., என்.எல்.சி., செயல் இயக்குனர் அசோக் கோட்டா, என்.எல்.சி., போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் அருளழகன், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, துணை ஆணையர் சுப்பிரமணியன், தொழிலதிபர்கள் வெங்கட்ராமன், சுமந்த், ஆய்வாளர் வசந்தம், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன், துரைமுருகன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.