நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் அறிவியியல் பாடப்பிரிவுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளியவில் மாணவி தாரா 585 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி அக் ஷமாலா 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி மித்ரா 555 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

மூன்று மாணவர்கள் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் சென்டம் எடுத்தனர். பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் முதல் வகுப்பு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கஸ்துாரி பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். பள்ளி மாணவர்களின் தேர்ச்சிக்கு துணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisement