திறன் மேம்பாட்டு பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு பயிற்றுநர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பயிற்றுநர்கள், 35 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தன்மைகள், ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் குறிப்பிட்ட கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாளும் விதம், கற்பிக்கும் வழிமுறைகள் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஜானகிராமன், தேவேந்திரன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

இந்த பயிற்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குறித்தும், அவர்களை கையாளும் விதம் மற்றும் எளிய முறையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளுதல் குறித்து விளக்கி பேசினார்.

மேலும், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்று தருவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உதவி திட்ட அலுவலர் மணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement