அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள நவக்கிரகங்களில், வடக்கு நோக்கிய திசையில் குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நேற்று மதியம் 1:19 மணிக்கு, ரிஷபராசியில் இருந்து குருபகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. 16 வகையான பொருட்களை கொண்டு குருபகவானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை குருக்கள் நாகராஜ், சோமு செய்தனர். ஏற்பாடுகளை கந்தவிலாஸ் ஜெயக்குமார் குடும்பத்தினர் செய்தனர். பக்தர்கள் பலர் பங்கேற்று, பரிகார பூஜைகளை செய்து சுவாமியை வழிபட்டனர்.

Advertisement