மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்

கரூர், கரூர் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் வரிசையில் நின்று, கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற, கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் சிறப்பாக தொடங்கியது. அதை தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், பக்தர்கள் நாள்தோறும் காலை, 6:00 மணி முதல் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று, கோவிலில் வைக்கப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்று, ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு வரிசையில் நின்று, தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement