மகள் மாயம் தந்தை புகார்

குளித்தலை :குளித்தலையை சேர்ந்த தங்கவேலு என்பவரின், 17 வயது மகள் பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர் கடந்த 10 மாலை, 5:30 மணியளவில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.


சிறிது நேரம் கழித்து மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகாரின்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement