மணிகா பத்ரா ஏமாற்றம் * டேபிள் டென்னிஸ் தரவரிசையில்

புதுடில்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் ஒற்றையரில் 29 வயதான, இந்தியாவின் மணிகா பத்ரா, 16 இடங்கள் பின்தங்கி, 46வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கடந்த மூன்று ஆண்டில் பெற்ற மோசமான தரவரிசையாக இது அமைந்தது. முன்னதாக 2022, ஏப்ரலில் 48 வது இடத்தில் இருந்தார்.
மற்றொரு வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, 34வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் சிறந்த இடம் பெற்ற இந்திய வீராங்கனையாக உள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஆயிஹா (69), யாஷஸ்வி (76), தியா சிட்டாலே (88) முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தக்கார் மட்டும் 'டாப்-50' பட்டியலில் உள்ளார். இவர் 49வது இடம் பிடித்துள்ளார். ஆண்கள் இரட்டையர் வரிசையில் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, 'நம்பர்-9' ஆக உள்ளது.

Advertisement