கல்லுாரி மாணவிக்கு செயற்கை கால் வழங்கல்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே சின்னஓபுளாபுரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 20.

சென்னை, அண்ணா பல்கலைகழகத்தில் இறுதி ஆண்டு கணினி பொறியியல் படித்து வருகிறார்.

அவர் ஒன்பதாம் வகுப்பு படித்த போது, சாலை விபத்தில் முட்டிக்கு கீழ் உள்ள வலது காலை இழந்தார். அண்ணா பல்கலைகழகத்தில் சேர்ந்த பின் கைபந்து மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினார். 'செயற்கை கால் இருந்தால் விளையாட்டில் மேலும் பல சாதனை படைப்பேன்' என, முதல்வருக்கு மனு அனுப்பினார்.

இதையடுத்து, துறை சார்ந்த அலுவலர்கள் ராஜலட்சுமியை சந்தித்து, செயற்கை காலுக்கான அளவு எடுத்து சென்றனர். நேற்று பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ், மாணவி ராஜலட்சுமியை தன் முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து, அவருக்காக தயாரிக்கப்பட்ட செயற்கை காலை வழங்கினார்.

Advertisement