புவனகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம்

புவனகிரி : புவனகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கியது.

டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

தாசில்தார் சித்ரா, தலை மையிடத்து கூடுதல் தாசில்தார் வேலுமணி, மண்டல துணை தாசில்தார் பழனி உடனிருந் தனர். முகாம் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களை தவிர்த்து வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.

இன்று 14ம் தேதி பரங்கிப்பேட்டை, 15, 16 ஆகிய தேதிகளில் புவனகிரி, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சேத்தியாத்தோப்பு குறுவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் மனுக்கள் அளிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக தாலுகா அலுவலக வளாத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement