மகள் மாயம்: தந்தை புகார்
ஈரோடு,
கள்ளக்குறிச்சி, குருபீடம், சித்தாத்துார் வெங்கடேசன் மகள் மனிஷா, 17; மொடக்குறிச்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி, எழுமாத்துார் அரசு கலை கல்லுாரியில் படிக்கிறார். கடந்த, 5ம் தேதி மாலை விடுதியில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கிளம்பினார்.
ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. தோழிகள், உறவினர்களிடம் விசாரித்தும் தகவல் இல்லை. தந்தை வெங்கடேசன் புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிராவல் மண் கடத்திய
டிப்பர் டிரைவர் கைது
கோபி, மே 14
கோபி, வெள்ளாங்கோவில் அருகே அண்ணா நகரில், சிறுவலுார் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியில் சோதனையிட்டபோது, உரிய அனுமதியின்றி மூன்று டன் கிராவல் மண் கடத்தி செல்வது தெரியவந்தது. லாரி டிரைவரான, பாண்டியம்பாளையத்தை சேர்ந்த மதி விஷ்ணுவை, 26, கைது செய்தனர். லாரி உரிமையாளரான சலவைக்கல்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை, போலீசார் தேடி வருகின்றனர்.