பொது டயர் வெடித்து கடைக்குள் புகுந்த கார்: பெண்கள் காயம்

கோயம்பேடு:அண்ணா நகரைச் சேர்ந்தவர் துல்கர், 73. இவர், நேற்று மதியம் போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு தன் காரில் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு அருகே சென்றபோது கார் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த பழக்கடைக்குள் புகுந்தது.

இதில், கடைக்காரர் லட்சுமி மற்றும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த சுகன்யா என, இரு பெண்கள் காயம் அடைந்தனர்.

அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement