மேட்டூர் அரசு கலைக்கல்லுாரியில் வரும் 27 வரை மாணவர் சேர்க்கை

மேட்டூர், மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் திருப்பதி(பொ) அறிக்கை:

மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை கடந்த, 7ல் தொடங்கியது. வரும், 27 வரை நடக்கிறது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தள முகவரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், புவியமைப்பியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கல்லுாரி குறியீட்டு எண்: 1031015ஐ தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

ஊரக பகுதி மாணவர்கள் விண்ணப்பிக்க, கல்லுாரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்படுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை, மையம் செயல்படுகிறது.

Advertisement