சாலைப் பணியாளர்கள் ஜூன் 12ல் போராட்டம்
திண்டுக்கல்:ஜூன் 12ல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக சாலைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முருகேசன் வரவேற்றார். 2002ல் பணிநீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் 5 மாதங்களாக காலம் தாழ்த்துவதோடு மேல்முறையீடு செய்ய முயன்று வருகிறது. இதை கண்டித்து ஜூன் 12ல் மாநிலம் முழுவதும் அனைத்து கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத் தலைவர்கள் மகேந்திரன், பழனிசாமி, ரவி, ராஜமாணிக்கம், பொருளாளர் தமிழ், பொதுச்செயலாளர் அம்சராஜ் கலந்து கொண்டனர்.
மேலும்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
-
6,000 பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அதிரடி
-
பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான மக்களை 'பதம் பார்க்கும்' தீர்மானம்! வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு