நடந்து சென்றவர் மீது மோதாமல் தவிர்த்த லாரி டிரைவர் பலி

துாத்துக்குடி:நடந்து சென்றவர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததால், டிப்பர் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார்.

துாத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 24, லாரி டிரைவர். இவர், நேற்று காலை, துாத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள சேமிப்பு கிடங்கில், புண்ணாக்கு மூட்டைகளை இறக்கிவிட்டு, டிப்பர் லாரியில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக, வேல்முருகன் திடீரென பிரேக் பிடித்தார்.

இருப்பினும் அவர் மீது லேசாக மோதிய லாரி, சாலையில் கவிழ்ந்தது.இதில், சம்பவ இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார். நடந்து சென்ற போது காயமடைந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் யாதவ், 35, சிகிச்சை பெறுகிறார். தெர்மல்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement