ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் தேர்வு: இந்தியா 'ஏ' அணி அறிவிப்பு

புதுடில்லி: இங்கிலாந்து தொடருக்கான இந்தியா 'ஏ' அணிக்கு ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரெல் தேர்வாகினர்.
இங்கிலாந்து செல்லும் இந்தியா 'ஏ' அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் (நான்கு நாள் ஆட்டம்) தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் மே 30ல் கேன்டர்பரியில் துவங்குகிறது. இரண்டாவது போட்டி ஜூன் 6-9ல் நார்த்தாம்ப்டனில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான இந்தியா 'ஏ' அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய டெஸ்ட் அணியில் 'ரெகுலராக' இடம் பெறும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜூரெல், இந்தியா 'ஏ' அணிக்கு தேர்வாகினர். கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக துருவ் ஜுரெல் அறிவிக்கப்பட்டார். சுப்மன் கில், தமிழகத்தின் சாய் சுதர்சன், இரண்டாவது போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடுவர்.
இந்தியா 'ஏ' அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), துருவ் ஜுரெல் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாகூர், இஷான் கிஷான், மானவ் சுதார், தனுஷ் கோடியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே. சுப்மன் கில், சாய் சுதர்சன் (2வது போட்டிக்கு மட்டும்).