ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை

கோவை : வட்டமலைபாளையம் மற்றும் ஆவாரம்பாளையம் பகுதிகளில் செயல்படும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மாணவி நிவேதா 600க்கு 589 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஐஸ்வர்யா 588, மாணவி ஜனனி 585மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர்.

இதேபோல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டு பாடப்பிரிவில் தலா ஐந்து மாணவர்களும், கணித பாடப்பிரிவில் இரண்டு மாணவர்களும், வணிகவியல் பாடப்பிரிவில் ஒரு மாணவரும் என 13 மாணவர்கள், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளைநிர்வாக அறங்காவலர் சுந்தர், பரிசுத் தொகை அளித்து பாராட்டினார். சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை, பள்ளி முதல்வர் சாரதா வாழ்த்தினர்.

Advertisement