கோவையில் சோதனை மையம் 'இசட்.எப். விண்ட் பவர்' துவக்கம்

கோவை:காற்றாலை உபகரணங்களுக்காக, நாட்டிலேயே மிகப்பெரிய சோதனை மையத்தை கோவையில், 'இசட்.எப் விண்ட் பவர்' நிறுவனம் துவக்கி உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த இசட்.எப் குழுமத்துக்கு சொந்தமான இசட்.எப்., விண்ட் பவர் நிறுவனம், இந்தியாவில், புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கோவை கருமத்தம்பட்டியில், இந்நிறுவனத்துக்கு சொந்தமான கியர் பாக்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது 13.2 மெகாவாட் திறன் கொண்ட புதிய சோதனை மையத்தை கோவையில் இந்நிறுவனம் துவக்கி உள்ளது.

இதில், நவீன காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் கியர் பாக்ஸ், பவர் டிரெய்ன்ஸ் ஆகியவற்றை சோதனை செய்து, சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.

புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்த வாடிக்கையாளர், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் சான்றிதழ் நிறுவனங்களுக்கு, சோதனை சான்றிதழ் அவசியம் என்ற நிலையில், இந்த மையம் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement