சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், பிரமேந்தர், 25, என்ற இந்தியர், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா சென்றார். அங்குள்ள ஜாலன் பெசார் நீச்சல் குளத்திற்கு மார்ச் 31ல் சென்றாார்.

அங்கிருந்த 12 வயது சிறுமியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது, கழிப்பறைக்கு சென்ற சிறுமியை, பிரமேந்தர் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு அளித்தார்.

இதுதவிர, அச்சிறுமியின் மொபைல் போனை அவரது அனுமதியின்றி எடுத்ததுடன், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தன் வலைதள கணக்கை பின்தொடர செய்தார்.

இதைத்தொடர்ந்து, அச்சிறுமிக்கு தகாத முறையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக குறுந்தகவல்களை பிரமேந்தர் அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி, உடனே பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, அச்சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

இதன்படி சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரமேந்தரைகடந்த ஏப்ரல் 2ம் தேதி கைது செய்தனர். சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், பிரமேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது.

இதையடுத்து, அந்நாட்டு நீதிமன்றம், பிரமேந்தருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement