நெல்லையில் ஒரே வீட்டில் இருவர் தீயில் சிக்கி தீக்கிரை; போலீஸ் விசாரணை

திருநெல்வேலி; திருநெல்வேலி அருகே 65 வயது பெண்ணும், 35 வயது ஆணும் தீயில் கருகி இறந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆரைக்குளத்தை சேர்ந்தவர் ஜான் 35. நேற்று இரவு 9:00 மணியளவில் அவரது வீட்டில் அவரும் 65 வயதான அவரது அத்தையும் தீயில் கருகி இறந்தனர்.
தகவல் அறிந்து திருநெல்வேலி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த பெண் தீக்குளிக்க முயற்சித்து, அவரை காப்பாற்ற முயன்ற தருணத்தில் ஜானும் காயமுற்று இறந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement