சட்டசபை தேர்தலில் இம்முறையும் தனித்துப்போட்டி: சீமான்

கோவை: '' வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடும், '' என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கோவையில் நடந்த மாநாட்டில் அவர் பேசியதாவது: அரசியல் வரலாற்றில் வாழ்க ஒழிக கோஷம் இல்லாதஒரே கட்சி நாம் தமிழர். கோவையில் வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். 5வது முறையாக களத்தில் தனித்தே நிற்போம். 234 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும், ஆண், பெண் வேட்பாளர்கள் தலா 117 இடங்களில் நிறுத்தப்படுவார்கள்.
ஆந்திராவில் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி இறந்தபோது தமிழகத்தில் கருணாநிதி, அரசு விடுமுறை அறிவித்தார். சோனியா மகிழ்ச்சி அடைவார் என இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழன் வாக்கை வாங்கி வயிறு வளர்த்து கட்சிகள் பிழைக்கின்றன. இந்த மண்ணிற்கு என துவங்கப்பட்ட கட்சிகள் உங்களுக்காக நின்றதா சுதந்திரமாக கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டதா
என் எண்ணம் மட்டும் சின்னம் அல்ல. சின்னமே நான் தான். விவசாயத்தை காப்போம் என்ற வாதத்தை முன்வைத்து தேர்தலில் நிற்போம். இந்திய அரசியல், இந்தியாவை யார் ஆள்வார்கள் என்பதில் என்னை தேடிய மக்கள், தமிழகத்தையார் ஆள்வார்கள் என்பதில் என்னை தவிர்த்துவிட்டு மக்கள் செல்ல மாட்டார்கள்.கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை. 8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம்.
இம்முறையும் 234 தொகுதிகளில்தனித்து போட்டி. ஆண்களுக்கு 117 இடங்களும், பெண்களுக்கு 117 இடங்களில் போட்டியிடும். இதில் 135 இடங்களில் இளைஞர்கள் போட்டியிடுவார்கள். மற்றவர்களுக்கு அரசியல் கட்சி தேர்தல் அரசியல். நமக்கு போர். இனமானப் போர். நிலம் காக்கும் போர். நான் முன்வைக்கும் அரசியலை ஒருவராலும் மறைக்க முடியாது. இவ்வாறு சீமான் பேசினார்.







