லஷ்கர் ஆதரவாளராக இருந்தவருக்கு டிரம்ப் நிர்வாகத்தில் பதவி

வாஷிங்டன்: ஒரு காலத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு ஆதரவாளராக இருந்ததுடன், அதில் இணைந்து பயற்சி பெற்றவரை அமெரிக்காவில் மத சுதந்திர கமிஷனுக்கான வெள்ளை மாளிகை ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ள நிலையில், இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
யார் இவர்
கடந்த 2000 ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்த பயங்கரவாத அமைப்பு தான் 2008 ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான அமைப்பு ஆகும்.
2003 ல், இவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்த புகாரின் கீழ் கடந்த 2004 ம் ஆண்டு, அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 13 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் 2017 ம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதனை ஆதரித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு அவர் வேறு பாதையில் பயணிக்க துவங்கிவிட்டார். பிரிவினைக்கு எதிராகபணியாற்றியதுடன், அமைதி முறையிலான பேச்சுவார்த்தையை ஊக்குவித்தார். மத நம்பிக்கை புரிதலுக்கான பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதுடன், மதம் குறித்த ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
கேள்வி
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்திவிட்டதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. தற்போது ராயர் நியமனம் மூலம் உலகிற்கு அமெரிக்கா என்ன சொல்ல விரும்புகிறது. உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில்இருந்து அமெரிக்கா பின்வாங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.









மேலும்
-
இரவிலும் இயங்கும் கல்குவாரியால் அபாயம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
-
வட்டிப்பணம் ரூ.8 கோடி; ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய பி.எப்., நிலுவை; இழப்புக்கு மேல் இழப்பு ஏற்படுவதை தவிர்க்குமா மாநகராட்சி
-
இன்றைய நிகழ்ச்சி மதுரை
-
தினமலர் செய்தியால் கிடைத்தது தரைப் பாலம்
-
மாணவர்களுக்கு பாராட்டு
-
வாடகை கட்டடத்தில் ரேஷன் கடைகள்