மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ: பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் அகால்கோட் சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இன்று ( மே 18) அதிகாலை 3:45 மணிக்கு இந்த தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் மன்சுரி மற்றும் அவரது 3 குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தனர். அதில் 1.5 வயது குழந்தையும் அடக்கம். மேலும் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்களும் பலியாகினர்.
தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், சுமார் 5 முதல் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Kulandai kannan - ,
18 மே,2025 - 21:55 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இரவிலும் இயங்கும் கல்குவாரியால் அபாயம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
-
வட்டிப்பணம் ரூ.8 கோடி; ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய பி.எப்., நிலுவை; இழப்புக்கு மேல் இழப்பு ஏற்படுவதை தவிர்க்குமா மாநகராட்சி
-
இன்றைய நிகழ்ச்சி மதுரை
-
தினமலர் செய்தியால் கிடைத்தது தரைப் பாலம்
-
மாணவர்களுக்கு பாராட்டு
-
வாடகை கட்டடத்தில் ரேஷன் கடைகள்
Advertisement
Advertisement