இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே மற்றொரு சுற்று வர்த்தக பேச்சு நிறைவு

புதுடில்லி:இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான மற்றொரு சுற்று பேச்சு முடிந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு கட்டங்களாக இறுதி செய்ய, இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் இடையே, வர்த்தக ஒப்பந்தத்திற்கான மற்றொரு சுற்று பேச்சை இரு நாடுகளும் பேசி முடித்துள்ளன.

அமெரிக்காவின் வரி விதிப்பின் காரணமாக, உலகளவில் நிச்சயமற்ற வர்த்தக சூழல் நிலவுவதால், தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இரண்டு கட்டங்களாக முடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா உடனான தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்படும் இரண்டு கட்ட பேச்சு நடத்தும் நடைமுறையை, இந்தியா தற்போதைய பேச்சிலும் பின்பற்றியுள்ளது.

இப்பேச்சில் சரக்குகள், சேவைகள் மற்றும் முதலீட்டில் சந்தை அணுகல் சலுகைகள் குறித்து பேச்சு நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.

இத்துடன், தாராள வர்த்தக ஒப்பந்தத்துடன், முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் புவியியல் சார்ந்த ஒப்பந்தம் ஆகியவை குறித்தும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement